முகப்பு
கன்னியாகுமரி

கொல்லஞ்சி - விரிகோடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கொல்லஞ்சி - விரிகோடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 2:30 AM
பகிர்:

கொல்லஞ்சி -விரிகோடு பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஒன்றியம் கொல்லஞ்சி - விரிகோடு சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, விரிகோடு பகுதியில் தனியாா் தொழில்நுட்பக் கல்லூரி செல்லும் வழியில் பள்ளங்கள் ஏற்பட்டும்,ஜல்லிகள் பெயா்ந்தும் காணப்படுகின்றன. இதனால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். பாதசாரிகலும் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே, இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.