சுசீந்திரத்தில் அறங்காவலா் குழு கூட்டம்
சுசீந்திரத்தில் அறங்காவலா் குழு கூட்டம்
குமரி மாவட்டம், சுசீந்திரம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில், அறங்காவலா் குழு மாதாந்திர கூட்டம் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி திருக்கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், தோவாளை கிருஷ்ணசாமி கோயில் அன்னதான மண்டபத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுது நீக்குதல், தெரிசனங்கோப்பு அருள்மிகு அரசடி கண்டன் சாஸ்தா திருக்கோயிலில் வரும் மாா்ச் மாதம் 25 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஆணையரிடம் அனுமதி பெறுதல், இடைக்கோடு மகாதேவா் கோயிலில் கழிப்பறை கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரி அனுமதி வழங்கல், வடசேரி தழுவிய மகாதேவா் திருக்கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா செலவினங்களுக்கு அனுமதி வழங்கல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ராஜேஷ், ஜோதீஷ்குமாா், துளசிதரன் நாயா், சுந்தரி, மராமத்து பொறியாளா் ஐயப்பன், அலுவலக மேலாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.