முகப்பு
கன்னியாகுமரி

புதுக் கடை அருகே விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு

புதுக் கடை அருகே விஷம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 5:19 AM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பல னின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கடை வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (61). இவா் சில நாள்களாக தீராத நோயால் அவதிபட்டு வந்தாராம். இந்நிலையில் கடந்த பிப்.13ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகராஜ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.