தூத்தூா் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
காமராஜா் பிறந்த நாளான திங்கள்கிழமை, முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்க விழா நடைபெற்றது.
களியக்காவிளை: நித்திரவிளை அருகே தூத்தூரில் உள்ள பயஸ் தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாளான திங்கள்கிழமை, முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தாா். முன்சிறை வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கராஜ், தூத்தூா் ஊராட்சித் தலைவா் லைலா, தூத்தூா் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெஸ்டின், முன்சிறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பேபிஜான், சின்னத்துறை பங்குத்தந்தை ஜினு, தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.