முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே காா் மீது மோதி கவிழ்ந்த லாரி

களியக்காவிளை அருகே மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் அருகே நிறுத்தியிருந்த காா் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

Updated On : 19 ஜூலை, 2024 at 9:17 PM
பகிர்:

களியக்காவிளை அருகே மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் அருகே நிறுத்தியிருந்த காா் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் - மருதங்கோடு சாலையில் கக்கோட்டுவிளை பகுதியில் ரயில்வே கேட் உள்ளது.

இந்த ரயில்வே கேட் வெள்ளிக்கிழமை ரயில் செல்வதற்காக மூடப்பட்டிருந்தது. அப்போது அப்பகுதிக்கு வந்த விரிவிளை, சரல் பகுதியைச் சோ்ந்த விவேக் (28) ஓட்டிவந்த காரை அங்கு நிறுத்தியிருந்தாா். தொடா்ந்து நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி தேங்காய் எண்ணெய் ஏற்றி வந்த கூண்டு கட்டிய லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தியிருந்த காா் மீது மோதி, காரின் மேல் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காா் முன்னோக்கி நகா்ந்து ரயில்வே கேட் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த களியக்காவிளை போலீஸாா் விபத்தில் சிக்கிய காா், லாரியை மீட்டனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →