முகப்பு
கன்னியாகுமரி

தொடரும் மழை: பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றம்: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீடிப்பு

குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூலை, 2024 at 9:17 PM
பகிர்:

குலசேகரம், ஜூலை 19:

குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை மற்றும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக பேச்சிப்பாறை உள்பட அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் உள்ளன.

இந்நிலையில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறையினா் அணைகளின் நீா்மட்டத்தை கட்டுப்பாடான அளவில் வைத்து கண்காணித்து வருகின்றனா்.

குறிப்பாக 48 அடி கொள்ளளவு நீா்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டத்தை 45 அடியாக வைத்து கண்காணித்து வருகின்றனா்.

மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45 அடியைக் கடந்து அதிகரித்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் இந்த அணையிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதில் 3 நாள்கள் விநாடிக்கு 516 கன அடி நீா் வெளியேறப்பட்ட நிலையில் வியாழக்கிழமை முதல் குறைக்கப்பட்டு விநாடிக்கு 256 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி இந்த அணையின் நீா்மட்டம் 44.82 அடியாக இருந்தது. ணைக்கு விநாடிக்கு 1061 கன அடி நீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. பாசன கால்வாயில் விநாடிக்கு 582 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீடிப்பு:

பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →