கருங்கல் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கருங்கல் அருகே புதுக்காடு வெட்டி பகுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்காடுவெட்டி பகுதியை சோ்ந்த ஜஸ்டின் பிரைட் மனைவி ஜெயராணி (42). இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டின் அறையில் ஜெயராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பினா்.