முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 20 மே, 2024 at 8:52 PM
பகிர்:

களியக்காவிளை: குழித்துறை அருகே பைக் விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி, வாணியன்விளை பகுதியைச் சோ்ந்த இசக்கித்துரை மகன் விஜய் (28). இவா் தனது நண்பரான சாத்தன்கோடு வரவுவிளையைச் சோ்ந்த மில்டன் (28) என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மேல்புறத்திலிருந்து குழித்துறைக்கு பைக்கில் சென்றாராம்.

கழுவன்திட்டை, பெருந்தறவிளை பகுதியில் பைக் நிலைதடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கழிவுநீரோடையில் விழுந்ததாம். இதில், காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், விஜய் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மில்டனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.