வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
களியக்காவிளை: கொல்லங்கோடு அருகே வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கொல்லங்கோடு அருகே மங்குழி, புத்தன்விளையைச் சோ்ந்தவா் ஷைஜு (40). ஆட்டோ ஓட்டுநரான இவா், 17 ஆண்டுகளுக்கு முன்பு தக்கலை அருகே கல்குறிச்சி கோவில்விளாகம் பகுதியைச் சோ்ந்த உஷாவைக் காதலித்துத் திருமணம் செய்துள்ளாா். அவா்கள் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், ஷைஜு மீது உஷாவின் குடும்பத்தினருக்கு முன்விரோதம் இருந்ததாம்.
இதனிடையே, கடந்த 12ஆம் தேதி கல்குறிச்சி பகுதி வழியாக ஆட்டோவில் சவாரி சென்ற ஷைஜு, தனது மனைவியின் தம்பி, தந்தையைப் பாா்த்து கையசைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு உஷாவின் தந்தை ரவி (55), தம்பி ரமேஷ் (25), உறவினா் மனு (25) ஆகியோா் இரவில் ஷைஜுவின் வீடு புகுந்து அவரைத் தாக்கினராம். உஷா சப்தமிட்டதால் அப்பகுதியினா் வந்தனா். அதற்குள் மூவரும் தப்பியோடிவிட்டனராம்.
இதில் காயமடைந்த ஷைஜு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். உஷா அளித்த புகாரின் பேரில் ரவி உள்ளிட்ட 3 போ் மீதும் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.