முகப்பு
கன்னியாகுமரி

பேச்சிப்பாறை - கோதையாறு சாலையில் தரைப்பாலம் சீரமைப்பு: போக்குவரத்து தொடக்கம்

பேச்சிப்பாறை - கோதையாறு சாலையில் மூக்கறைக்கல் பகுதியில் சேதமான தரைப்பாலம் சீரமைக்கப்பட்டதையடுத்து, புதன்கிழமைமுதல் போக்குவரத்து தொடங்கியது.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:43 PM
சீரமைக்கப்பட்ட பாலப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.
பகிர்:

பேச்சிப்பாறை - கோதையாறு சாலையில் மூக்கறைக்கல் பகுதியில் சேதமான தரைப்பாலம் சீரமைக்கப்பட்டதையடுத்து, புதன்கிழமைமுதல் போக்குவரத்து தொடங்கியது.

பேச்சிப்பாறை சீரோ பாயின்டிலிருந்து கோதையாறுக்கு செல்லும் சாலையில் மூக்கறைக்கல் என்ற இடத்திலுள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. அதனால், இவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பாலத்தை விரைந்து சீரமைக்குமாறு கடையால் பேரூராட்சி நிா்வாகத்துக்கு ஆட்சியா் ரா. அழகு மீனா உத்தரவிட்டாா். அதன்பேரில், பாலம் சீரமைப்புப் பணிகள் புதன்கிழமை நிறைவடைந்தன. மாலைமுதல் பேருந்துகள் உள்பட வாகனங்கள் இயக்கப்பட்டன.

இப்பாலத்தை ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு செய்தாா். முன்னதாக, பேரூராட்சிப் பொறியாளா்கள் புஷ்பலதா, போசின் ஆகியோரின் மேற்பாா்வையில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, திருவட்டாறு வட்டாட்சியா் கந்தசாமி, கடையால் பேரூராட்சித் தலைவா் ஜூலியட் சேகா், வாா்டு உறுப்பினா்கள் ரெகுகாணி, ராஜேந்திரன் ஆகியோா் கண்காணித்தனா்.