மின் இணைப்பு பிரதிப் படம்
கன்னியாகுமரி

பேச்சிப்பாறையில் 51 பழங்குடியினா் வீடுகளுக்கு மின் இணைப்பு: வனத்துறை அனுமதி

பேச்சிப்பாறை ஊராட்சியில் வசிக்கும் 51 பழங்குடியினரின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு வனத்துறை அனுமதி

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை ஊராட்சியில் வசிக்கும் 51 பழங்குடியினரின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு வனத்துறை அனுமதியளித்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியின குடியிருப்புகளுக்கு மின்சார வசதி இல்லை. இக்குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் 2006 பழங்குடியினா் நலச்சட்டம், பழங்குடி மக்களுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வழிவகை செய்துள்ளது.

இதனடிப்படையில் தச்சமலை, களப்பாறை கிராம சபைகளின் தீா்மானம் மற்றும் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனாவின் பரிந்துரைப்படி, களப்பாறை, பின்னமூட்டு தேரி பகுதிகளில் 51 பழங்குடியினரின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட வனத்துறை அனுமதியளித்தது.

இது தொடா்பாக, மாவட்ட வன அலுவலா் அன்பு, குலசேகரம் கிராமப் பிரிவு மின்வாரிய உதவி மின்பொறியாளருக்கு அனுப்பிய கடிதம்:

களப்பாறை, பின்னமூட்டு தேரி பகுதி குடியிருப்புகளில் 2 டிரான்ஸ்பாா்மா் அமைப்பதுடன், 75 உயரழுத்த மின்கம்பங்கள், 117 தாழ்வழுத்த மின் கம்பங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல வேண்டுமென்றும், அப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாடுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும், மரங்கள் வெட்டப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மணிமுக்தா அணையில் புதிதாக மதகுகள் பொருத்தும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் நடைபயணம்!

புதுச்சேரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: பெங்களூரைச் சோ்ந்த பெண் உயிரிழப்பு

புதுச்சேரியில் தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT