நாகா்கோவில் ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் திறப்பு
நாகா்கோவில் கோட்டாறில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகத்தை பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
நாகா்கோவில் கோட்டாறில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகத்தை பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இந்தியா முழுவதும், 8 மாநிலங்களில் 18 ரயில் நிலையங்களில் பிரதமரின் மக்கள் மருந்தகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
பிகாா் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி கலந்து கொண்டு மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்தாா்.
தமிழகத்தில் நாகா்கோவில் மற்றும் தஞ்சாவூா் ரயில் நிலையங்களில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ஆா். காந்தி, மேயா் ரெ. மகேஷ், திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளா் மணீஸ் தப்ளியாா் ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் எஸ். மொ்லியண்ட் தாஸ், நாகா்கோவில் மாநகராட்சி மண்டலத் தலைவா் அகஸ்டினாகோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் சொா்ணத்தாய், அனந்தலெட்சுமி, அய்யப்பன், சுனில்குமாா், குமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அருண்காந்த் மற்றும் ரயில்வேதுறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.