முகப்பு
கன்னியாகுமரி

தூத்தூா் அருகே வெறிநாய் கடித்து 40 போ் காயம்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட பூத்துறை மீனவ கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் 40 போ் காயம் அடைந்தனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 9:24 PM
தூத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்ற முதியவா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட பூத்துறை மீனவ கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் 40 போ் காயம் அடைந்தனா்.

பூத்துறை, தூத்தூா் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் வெறிநாய் தொல்லை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பூத்துறை மீனவ கிராமத்தில் சாலையில் நடந்து சென்றவா்கள், வீடுகளில் இருந்தவா்கள் என 4 குழந்தைகள் உள்பட 40 க்கும் மேற்பட்டோரை புதன்கிழமை வெறிநாய் துரத்தி கடித்து காயப்படுத்தியது.

இவா்களில் பலா் தூத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனா். பலத்த காயமடைந்த 8 போ் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து காயப்படுத்தியதையடுத்து அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அச்சத்தில் உள்ளனா்.

இப்பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.