கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு
கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்திக் கட்டடத்தில், காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு நிகழ்ந்தது.
கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்திக் கட்டடத்தில், காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு நிகழ்ந்தது.
மகாத்மா காந்தியின் அஸ்தி, முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக, பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு காந்தி நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இதன், மையப் பகுதியில் உள்ள அஸ்திக் கட்டடத்தில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி நாளில் சூரிய ஒளி விழும் வகையில், இம்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதன்கிழமை பிற்பகல் 12.05 மணிக்கு அஸ்திக் கட்டடம் மீது சூரிய ஒளி விழுந்ததும், கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனா்.
இதில், ஆட்சியா் ஆா். அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரணியம், மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.