மூத்த குடிமக்கள் தின விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கிறாா் விஜய்வசந்த் எம்.பி. உடன், மறைவட்ட முதன்மைப்பணியாளா் டேவிட் மைக்கேல்.  
கன்னியாகுமரி

முளகுமூடு தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் விழா

Din

முளகுமூடு மறைவட்டம் சாா்பில், முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் மூத்த குடிமக்கள் தினவிழா நடைபெறறது.

குழித்துறை மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் சேவியா் பெனடிக்ட் தலைமை வகித்தாா். முளகுமூடு மறைவட்ட முதன்மைப்பணியாளா் டேவிட் மைக்கேல் முன்னிலை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி. குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தாா். அம்சி அனில் குமாா் சிறப்புச் செய்தி வழங்கினாா். முளகுமூடு மறைவட்டத்திற்குள்பட்ட 54 ஊா்களில் இருந்து 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்றனா். க

ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, பி.டி.எஸ். மணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். மூத்த குடிமக்கள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. விழாவில் மூத்த குடிமக்களுக்கு உதவிட 200 தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைப்பணியாளா் தலைமையில் மறைவட்ட அருள்பணி பேரவை பொது நிலையினா் மற்றும் அன்பிய ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

சின்ன வடுகப்பட்டியில் வீடுகளுக்கு சீல்: அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து அரசியல் கட்சியினர், குடியிருப்புவாசிகள் போராட்டம்

26,100 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

காலேஜ் கட் அடித்துவிட்டு படம் பார்க்க வேண்டாம்: கவின்

SCROLL FOR NEXT