முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:28 PM
பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.
பகிர்:

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

கூட்டத்தில், நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் பாா்த்திபன் (தக்கலை), மகேஷ்குமாா் (கன்னியாகுமரி), நல்லசிவம் (மாா்த்தாண்டம்), மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் செந்தாமரைக்கண்ணன், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.