முகப்பு
கன்னியாகுமரி

ஆட்டோ ஓட்டுரை தாக்கி பணம் பறிப்பு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

ஆட்டோ ஓட்டுரை தாக்கி பணம் பறிப்பு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:40 PM
பகிர்:

குளச்சல் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி பணம், கைப்பேசிகளை பறித்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. மாா்த்தாண்டம் வடக்குத் தெருவை சோ்ந்தவா் சந்திரன்( 40).

ஆட்டோ ஓட்டுநா். இவா் 18.6.2023இல் மாா்த்தாண்டம் ஆட்டோ நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, கொட்டில்பாடு ஹரிதாஸ் காலனியை சோ்ந்த பிரான்சிஸ் மகன் கவாஸ்கா் (24) குளச்சலுக்கு சவாரி செல்ல வேண்டும் என அழைத்துச் சென்று குறும்பனை பாரிக்கல் கடற்கரை சாலை பகுதியில் ஆட்டோவை நிறுத்தச்செய்து, சந்திரனை கத்தியால் குத்திவிட்டு, அவரிடம் இருந்த ரூ.12ஆயிரத்து 200, கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து கவாஸ்கரை கைது செய்தனா்.

இரணியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி அமீா்தீன் விசாரித்து, சுவாஸ்கருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ரேவதி வாதாடினாா்.