பாறசாலை அருகே மூதாட்டி சடலம் மீட்பு
களியக்காவிளையை அடுத்த கேரள மாநிலப் பகுதியான பாறசாலை அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.
களியக்காவிளையை அடுத்த கேரள மாநிலப் பகுதியான பாறசாலை அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.
பாறசாலை காவல் சரகம் செங்கல் கிராமம், கல்லுவிளை, ஷாப்புமுக்கு புறவழிச் சாலை பகுதியில் கடந்த அக்.3-ஆம் தேதி 62 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
இதுகுறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.