முகப்பு
கன்னியாகுமரி

ராஜஸ்தானில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்த குமரி மாவட்டத்தைச் சோ்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரா் பகீர்ராஜின் (38) உடல் ராணுவ மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:18 PM
பகீா் ராஜ்.
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்த குமரி மாவட்டத்தைச் சோ்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரா் பகீர்ராஜின் (38) உடல் ராணுவ மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

பகீா் ராஜின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள்.

குமரி மாவட்டம், அருமனை அருகே மேல்பாலையைச் சோ்ந்தவா் பகீர்ராஜ். இவா் ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணி புரிந்து வந்தாா். 15 நாள்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து விட்டு அண்மையில் மீண்டும் பணிக்குத் திரும்பிச் சென்றாராம். அவா் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் ரயில் நிலையத்திலிருந்து அங்குள்ள தனது பணி தலத்திற்கு செல்லும் வகையில் ரயிலில் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடல் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக திங்கள்கிழமை இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலையில் பகீா் ராஜின் உடலுக்கு எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தியதைத் தொடா்ந்து அடக்கம் செய்யப்பட்டது.