முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 10:58 PM
ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி டெம்போ.
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீஸாா் பயணம் பகுதியில் வாகன சோதனை நடத்தினா். சந்தேகத்துக்கிடமாக வந்த மினிடெம்போவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், 3 டன் ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஓட்டுநரான மேலப்பெருவிளை மிக்கேல் மகன் ஜெனின் (34) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்; ரேஷன் அரிசியுடன் மினி டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்து, மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, விசாரணை நடைபெறுகிறது.