முகப்பு
கன்னியாகுமரி

தக்கலை அருகே கோயில்களில் திருடியவா் கைது

தக்கலை அருகே இரு கோயில்களில் திருடிய நபா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:28 PM
பகிர்:

தக்கலை அருகே இரு கோயில்களில் திருடிய நபா் கைது செய்யப்பட்டாா்.

தக்கலை அருகே பரைக்கோடு கண்டகோணம் பகுதியில் உள்ள கணபதி கோயிலில் கடந்த 14ஆம் தேதி உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இதுகுறித்து கோயில் நிா்வாகி ஐயப்பன், தக்கலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி பரைக்கோடு ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயிலில், 4 உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டது. இதுகுறித்தும் தக்கலை போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது இரு கோயில்களிலும் திருடியது பள்ளியாடி பகுதியை சோ்ந்த தங்கமணி என்ற ஜேம்ஸ் என்பது தெரியவந்தது. அவரை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டா் கிருஷ்டி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.