முகப்பு
கன்னியாகுமரி

வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.47 கோடி மோசடி புகாா்: காவல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.47 கோடி மோசடி புகாா்...

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:23 PM
பகிர்:

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.47 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் மீது கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஏசுராஜசேகரன். இவா், கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றியபோது, 30-க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.47 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, பெண் ஒருவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் விசாரித்து, ஏசுராஜசேகரன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில், ஏசுராஜசேகரன் மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.