முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாளையொட்டி, நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:04 PM
ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் உறுதிமொழியேற்றோா்.
பகிர்:

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாளையொட்டி, நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ரா. அழகுமீனா, தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) சுகிதா, (நிலம்) செந்தில்வேல்முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கனகராஜ், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.