முகப்பு
கன்னியாகுமரி

பிஎஸ்என்எல் சேவையை 5 ஜியாக அதிகரிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் சேவையை 5 ஜியாக அதிகரிக்கக் கோரி குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:01 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

பிஎஸ்என்எல் சேவையை 5 ஜியாக அதிகரிக்கக் கோரி குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலா் ஆா். செல்லசுவாமி தலைமை வகித்துப் பேசினாா்.

இதில், நிா்வாகிகள் அண்ணாத்துரை, லீமாரோஸ், உஷா பாசி, எம். அந்தோணி, ரெஜீஸ் குமாா், என்.எஸ். கண்ணன், எஸ்.ஆா்.சேகா், என். ரவி, மலைவிளை பாசி, தங்க மோகனன், விஜயமோகனன், கிசாந்த் மேரி, மிக்கேல் நாயகி, சின்னசாமி, மிக்கேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.