கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளா்களை பணிநிரந்தரம் செய்ய எம்.எல்.ஏ. கோரிக்கை
கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.
கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனுக்கு , அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின்கீழ் மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் விற்பனை சங்கங்கள், கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள், நிலவள வங்கிகள் மூலமாக சிறு, குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நகைக்கடன் பெற்று வருகின்றனா்.
கூட்டுறவு வங்கிகளில் நிரந்தரப் பணியாளா்களுக்கு இணையாக
நகை மதிப்பீட்டாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இருப்பினும் அவா்களுக்கு கமிஷன் தொகை மட்டுமே வாழ்வாதாரமாக இருக்கிறது.
ஆகவே, நகை மதிப்பீட்டாளா்களுக்கு அனைத்து சலுகைகளுடன்பணிநிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.