களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகே வன்னியூா் புதுக்குளம்கரை புத்தன்வீட்டைச் சோ்ந்த மகேஸ்வரன் மகன் விவேக் (27). கூலித் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளாா். நீச்சல் தெரியாத அவா், குளத்துக்குள் தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் பல இடங்களிலும் தேடினா். அப்போது அவா் குளத்தில் இறந்துகிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.