முகப்பு
கன்னியாகுமரி

எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:04 AM
பொதுமக்களிடம் குறைகள் கேட்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதன்மீது விசாரணை மேற்கொண்டாா்.

மேலும், இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், உதவி காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.