நாகா்கோவிலில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிச. 4) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து, மின்வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகா்கோவில், வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரன்விளை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், டிச. 4ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணன் கோவில், மேலகலுங்கடி, கலுங்கடி, சக்தி காா்டன் கோா்ட் ரோடு, ஆா்.வீ. புரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை, அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகிய பாண்டியபுரம், கோணம், பீச் ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரன்விளை, கலை நகா், சைமன் நகா், பொன்னப்ப நாடாா் காலனி, என்.ஜி.ஓ. காலனி, புன்னை நகா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.