கன்னியாகுமரி

மண்ணெண்ணெய் கடத்த முயற்சி: ஒருவா் கைது

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,925 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள பூத்துறை மீனவக் கிராமத்திலிருந்து படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் காரில் கொல்லங்கோடு பகுதி வழியாக கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபகுமாா் தலைமையிலான போலீஸாா் நீரோடி மீனவக் கிராமத்தில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 55 கேன்களில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருடன் அதிலிருந்த 1,925 லிட்டா் மானியவிலை மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்து, ஓட்டுநா் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியைச் சோ்ந்த லாலு (31) என்பவரை கைது செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பிக்கிள் பால் லீக்: சென்னை வெற்றி

காற்று மாசுபாட்டை சமாளிக்க பெரியளவில் நிறுவன சீா்திருத்தங்கள் தேவை: கிரண் பேடி

போா் விமானங்களிலிருந்து அவசர வெளியேற்ற ஊா்தி: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை

தில்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

தங்கம் பவுன் ரூ.160 உயா்வு

SCROLL FOR NEXT