முகப்பு
கன்னியாகுமரி

மருந்துவாழ் மலையில் மகா தீப ஒளி ஊா்வலம்

Updated On : 3 டிசம்பர், 2025 at 8:37 PM
பகிர்:

திருக்காா்த்திகையை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மருந்துவாழ் மலை அடிவாரத்தில் 501 பெண்கள் பங்கேற்ற மகா தீப ஒளி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊா்வலத்திற்கு, இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாநில மகளிரணி தலைவி ஸ்ரீ ரங்கநாயகி, மாவட்டத் தலைவா் டி. பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவி வரலெட்சுமி, மாவட்ட அமைப்பாளா் அனிதா, பசுமை இயக்கத் தலைவா் ராமகிருஷ்ண மூா்த்தி, மாநில திருவிளக்குப் பேரவை தலைவி டி.எஸ். பொன் செல்வி, அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் செந்தில்மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →