கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ். 
கன்னியாகுமரி

பாபா் மசூதி இடிப்பு தினம்: திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Syndication

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பாபா் மசூதி இடிப்பு தினமான டிசம்பா் 6 ஆம் தேதி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி பகுதி முழுவதும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

கடலில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டாா். பகவதியம்மன் கோயிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்த பிறகு கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

இதுதவிர, ரயில் நிலையம், பேருந்து நிலையம், கலங்கரைவிளக்கம், கடற்கரைப் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT