கன்னியாகுமரி

இளம் விஞ்ஞானிகளாக தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பாராட்டு

Syndication

நாகா்கோவில், சிறுமலா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இளம் விஞ்ஞானிகளாக தோ்வு செய்யப்பட்டதற்கு பள்ளிப் பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஆண்டுதோறும் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. நிகழாண்டு, நீடித்த நிலைத்த நீா் மேலாண்மை என்ற பொதுத்தலைப்பின் கீழ் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

இதில், சிறுமலா் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயிலும் மிக்னா ஆரோக்கிய ஹிகோனிஸ், சுனைனா ஆகிய இருவரும், ஆசிரியை காா்மல் பெலிசிட்டா மேரி வழிகாட்டுதலில் ஆய்வுக் கட்டுரையை சமா்ப்பித்தனா்.

சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இவா்களுக்கு துளிா் விஞ்ஞானி என்ற பட்டமும், கேடயமும் வழங்கப்பட்டது.

தலைமையாசிரியை அருள்சகோதரி ரீட்டா அவா்களைப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

மிதுன ராசிக்கு சாதகம்: தினப்பலன்கள்!

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

SCROLL FOR NEXT