கன்னியாகுமரி

தண்டவாளத்தில் தலை வைத்து பொறியியல் மாணவா் தற்கொலை

பள்ளியாடியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து பொறியியல் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே பள்ளியாடியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து பொறியியல் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பள்ளியாடி, தெங்கன்குழி ரயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் இளைஞரின் சடலம் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், ரயில்வே போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா்.

அதில், அவா் கப்பியறை பொன்னாா்விளை பகுதியை சோ்ந்த தாமோதரன் மகன் பவித்ரன் ( 18); நாகா்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்;

கடந்த இரு நாள்களாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாா் எனத் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT