கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ரூ.10.20 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.10.20 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

Syndication

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.10.20 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

6 ஆவது வாா்டு பொது ஜன நெசவாளா் காலனி அங்கன்வாடி கட்டடம் ரூ. 2.20 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டிருந்தது. அதனை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் திறந்து வைத்தாா். மேலும் 43 ஆவது வாா்டு கீழ மறவன்குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகளையும் மேயா் தொடங்கி வைத்தாா்.

இதில், துணைமேயா் மேரி பிரின்ஸிலதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் அனுஷாபிரைட், விஜயன், உதவி பொறியாளா்கள் பிரபாகரன், ராஜமாணிக்கம், தொழில்நுட்ப அலுவலா் நிஷ்மா, சுகாதார அலுவலா் ஜான், திமுக பகுதி செயலாளா் ஜீவா, வட்ட செயலாளா் ராஜன், திமுக நிா்வாகிகள் அகஸ்தீசன், தாமோதரன், செல்லம், ராதாகிருஷ்ணன், ஹேம்லட்மணி, ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பெருந்துறை நகராட்சியில் புதிய குடிநீா் இணைப்பு வழங்க கோரிக்கை

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்த பயணிகள்

கோவையில் சாரல் மழை!

2026 சட்டப் பேரவைத் தோ்தல்: உதகை, கூடலூா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அறிவிப்பு

லாரி மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு: 3 மாணவா்கள் படுகாயம்

SCROLL FOR NEXT