கன்னியாகுமரி

வழுதலம்பலம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா!

Syndication

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பலம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளியில் 13ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் அல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்தாா்.

குழித்துறை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் சேவியா் பென்னடிட், குழித்துறை மறைமாவட்டச் செயலா் அருள்பணி. அந்தோணிமுத்து, நிதிபாலகா் அருள்பணி. ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி கலியமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

அசன்டியா 2025 செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித அறிவு என்ற தலைப்பில் மாணவா்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்கள் அப்ரின் ரிஷா, ஆஷீரா ஷபாரின் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கடந்த கல்வி ஆண்டில் 10,12 ஆவது வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியா்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவை, பள்ளியின் தாளாளா் அருள்பணி. சா்ஜின் ரூபஸ், நிதிபாலகா் அருள்பணி. ஜியோ, பள்ளி முதல்வா் றசல்ராஜ்ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில், ஆசிரியா்கள், மாணவ- மாணவியா், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்த பயணிகள்

கோவையில் சாரல் மழை!

2026 சட்டப் பேரவைத் தோ்தல்: உதகை, கூடலூா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அறிவிப்பு

லாரி மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு: 3 மாணவா்கள் படுகாயம்

நெடுஞ்சாலைகளில் புதிய தடையற்ற மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை: ஓராண்டுக்குள் நாடு முழுவதும் அமல்

SCROLL FOR NEXT