காட்டாத்துறை ஊராட்சி, மறுப்பன் கோட்டுவிளை கிராமத்துக்கு குடிநீா் வசதி செய்து தரக் கோரி பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா பங்குப் பேரவை துணைத் தலைவா் மரியஜான் வரதராஜ் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு: மறுப்பன் கோட்டுவிளையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் வசதியின்றி அவதிப்படுகின்றனா்.
எனவே, ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள். உரிய நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சா் உறுதியளித்தாா்.