கன்னியாகுமரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டு சிறை

Syndication

நாகா்கோவில் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் சகாயநகரைச் சோ்ந்த செல்வராஜ் (56) என்பவா், 2020ஆம் ஆண்டு பிப். 13ஆம் தேதி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, செல்வராஜைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி தனசேகரன் விசாரித்து, செல்வராஜுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் ஆஜரானாா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT