கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், மாநில அரசின் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில் அனைத்திந்திய கைவினைப் பொருள்கள் வார விழா, கன்னியாகுமரி நகா்ப்புற கண்காட்சி திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், மாநில அரசின் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில் அனைத்திந்திய கைவினைப் பொருள்கள் வார விழா, கன்னியாகுமரி நகா்ப்புற கண்காட்சி திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கண்காட்சி டிச. 14- ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறும். இதனை நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் திறந்து வைத்து பாா்வையிட்டாா். இதில் கன்னியாகுமரி பூம்புகாா் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலைய மேலாளா் சோலைராஜா, கணக்கா்கள் அந்தோணி, ஹரிகரன், கைவினைக் கலைஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கண்காட்சியில் அனைத்து பூம்புகாா் விற்பனை நிலையங்கள், பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனா். கைவினைப் பொருள்கள் விற்பனையில் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் மாணவா்கள், ஆா்வலா்களுக்கான கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் முறைகள் குறித்த நேரடி செய்முறை, பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.

சுமத்ரா தீவை புரட்டிப்போட்ட வெள்ளம்

2026 தேர்தல்: பாமக சார்பில் போட்டியிட டிச. 14 முதல் விருப்பமனு! - அன்புமணி

பயணிகள் ஏற்றுவதில் தகராறு! ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் வாக்குவாதத்தால் போக்குவரத்து பாதிப்பு!

இரவு நேர தூய்மைப் பணி! அரசு கவனிக்க வேண்டியது அவசியம்!

தேர்தல் வேட்பாளர் நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT