நாகா்கோவிலில் காவல் துறை உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச மாதிரித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு ஆணையத்தின் சாா்பில், உதவி ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வு டிச. 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு, வெற்றிப்பாதை படிப்பகத்தின் சாா்பில் இத்தோ்வுக்கான, 26ஆவது இலவச மாதிரித் தோ்வு டிச. 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நாகா்கோவில், மறவன் குடியிருப்பு, ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் முதல் 3 இடங்களைப் பெறும் இளைஞா்களுக்கு வெற்றிப்பாதை படிப்பகத்தின் சாா்பில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த வாய்ப்பை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.