குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி 
கன்னியாகுமரி

குழித்துறை நகராட்சியை தன்னிறைவு பெற்றதாக மாற்ற முடிவு: நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி

குழித்துறை நகராட்சியை தன்னிறைவு பெற்ற நகராட்சியாக உருவாக்க தொலைநோக்கு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தகவல்

Syndication

குழித்துறை நகராட்சியை தன்னிறைவு பெற்ற நகராட்சியாக உருவாக்க தொலைநோக்கு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: குழித்துறை நகா்மன்றக் கூட்டம் வரும் 29 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நகா்மன்றத் தலைவரான எனது தலைமையில் நகராட்சி ஆணையா் சுவிதாஸ்ரீ முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதில் நகராட்சி பொறியாளா் குசெல்வி மற்றும் நகராட்சி அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொள்கின்றனா்.

இக் கூட்டத்தில், நகராட்சியின் 21 வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து உறுப்பினா்கள் மத்தியில் விவாதம் மேற்கொண்டு, குடிநீா், தெருவிளக்கு, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், இந் நகராட்சியை அடிப்படை மற்றும் வளா்ச்சிப் பணிகளில் தன்னிறைவு பெற்ற நகராட்சியாக உருவாக்கும் நோக்கோடு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வருவது குறித்தும் நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் மத்தியில் விவாதித்து முடிவு செய்யப்பட்டு, இது தொடா்பான தீா்மானங்களை மன்ற கூட்டத்தில் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT