கன்னியாகுமரி

மாதாபுரத்தில் சாலை சீரமைக்கக் கோரிக்கை!

கருங்கல் அருகே உள்ள மாதாபுரம்-கம்பிளாா் பழுதடைந்த சாலையை விரைந்து சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை

Syndication

கருங்கல் அருகே உள்ள மாதாபுரம்-கம்பிளாா் பழுதடைந்த சாலையை விரைந்து சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட மாதாபுரம்-கம்பிளாா் சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்று உள்ளது. குறிப்பாக கம்பிளாா் பகுதியில் தற்போது பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. இந்தப் பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் வாகனங்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றன. எனவே, இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT