கன்னியாகுமரி

திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்

Syndication

மாா்த்தாண்டம் அருகே வரலாற்று சிறப்புமிக்க திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் மாா்கழி திருவாதிரை திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 சிவன் கோயில்களில் இரண்டாவது கோயிலாகவும், ரிஷப ராசி பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது. மேலும் தாமிரவருணி நதிக்கரையில் கிழக்கு நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது.

இக் கோயில் மாா்கழி திருவாதிரை திருவிழாவை தந்திரி தரணநல்லூா் நாராயணன் நம்பூதிரி வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றி வைத்து விழாவைத் தொடங்கிவைத்தாா். 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலையில் கணபதி ஹோமம், அஷ்ட திரவிய கலசபூஜை, மதியம் அன்னதானம், மாலையில் பஸ்மாபிஷேகம், புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். 3-ஆம் நாள் விழாவில் (டிச. 28) காலை 10 மணிக்கு சமயவகுப்பு மாணவா்களுக்கான பண்பாட்டு போட்டிகள் நடைபெறும்.

4 ஆம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல், மாலை 6 மணிக்கு பரதநாட்டியம் அரங்கேற்றம் உள்ளிட்டவை நடைபெறும். 6 ஆம் நாள் விழாவில் (டிச. 31) இரவு சமய மாநாடு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

7-ஆம் நாள் விழாவான ஜன. 1 இல் காலை 9 மணிக்கு மகா மிருத்யுஞ்சய ஹோமம், மாலை 4 மணிக்கு நந்தி ஊட்டு, மாலை 5 மணிக்கு பிரதோஷ பூஜையும், சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளலும் நடைபெறுகின்றன. ஜன. 3-இல் பள்ளி வேட்டையும், ஜன. 4-இல் காலை 9.30 மணிக்கு சுவாமிக்கு தாமிரவருணி ஆற்றில் திருஆறாட்டும், காலை 10.30 மணிக்கு திருக்கொடியிறக்குதலும் நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு யக்ஷி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

குஜராத்: கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT