முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் தூய மரியன்னை பசிலிக்கா பங்கு அருள்பணி பேரவை சாா்பில், அன்பிய மண்டலங்களுக்கு இடையேயான கிறிஸ்துமஸ் பாடல் போட்டி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு திருத்தல அதிபா் அருள்பணி வி. கில்பா்ட் லிங்சன் தலைமை வகித்தாா். பசிலிக்காவில் உள்ள 32 அன்பியங்கள் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடந்த போட்டியில், எரேமியா மண்டலம் முதல் பரிசையும் , ஆமோஸ் மண்டலம் 2ஆம் பரிசையும், தானியேல் மண்டலம் 3ஆம் பரிசையும் பெற்றது.