மாா்த்தாண்டத்தில் சிறுவனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததாக, சிறுவனின் தாயாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா், காந்தி மைதானப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதி வழியாக இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனை நிறுத்தி விசாரித்ததில், சிறுவன் 18 வயது நிரம்பாமல் பைக் ஓட்டியது தெரிய வந்தது.
இதையடுத்து, சிறுவனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரது தாயாா் நெய்யூா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி உஜின் கிரேசி மற்றும் சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.