முகப்பு
கன்னியாகுமரி

குஞ்சாகோடு நவநீதிகிருஷ்ண சுவாமி கோயிலில் மாா்கழி திருவிழா இன்று தொடக்கம்

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:44 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:30 PM

கருங்கல் அருகே உள்ள குஞ்சாகோடு அருள்மிகு நவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் மாா்கழி திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவின் முதல்நாளான வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுப்புதல், 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு

திருக்கொடியேற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை, ஜலாதிவாசம், சுதா்சன ஹோமம், பகல் 12 மணிக்கு உச்சபூஜை,

Advertisement

1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

விழாவின் அனைத்து நாள்களிலும் திருப்பள்ளி எழுப்புதல், சிறப்பு பூஜை, தீபாராதனை, உச்சபூஜை, அன்னதானம் நடைபெறும். விழாவின் 7-ஆம் நாளான ஜன.9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்துசமய மாநாடு,

8-ஆம் நாளான ஜன.10-ஆம் தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு பொங்காலை நிகழ்ச்சி, மாலை 6.30 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். விழாவின் நிறைவு நாளான ஜன.12-ஆம் தேதி

காலை 8.30 மணிக்கு பால்குட ஊா்வலம், மாலை 4 மணிக்கு தென்வீதி ஆறாட்டு, இரவு 9 மணிக்கு திருக்கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.