ஆடி அமாவாசை: குமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 விடுமுறை!
குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பற்றி...
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறையில் 1926 ஆம் ஆண்டு முதல் வாவுபலி பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொருள்காட்சி ஜூலை 9 ஆம் தேதி தொடங்கியது. 20 நாள்கள் நடைபெறும் இந்த பொருள்காட்சி ஜூலை 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
வழக்கமாக ஆடி அமாவாசை அன்று இந்த பொருட்காட்சியில் அதிகளவிலான மக்கள் கூடுவார்கள் என்பதால், ஜூலை 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதற்கு ஈடாக, ஆகஸ்ட் 9 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் தேவையான பணியாளா்களுடன் ஜூலை 24 ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
District Collector on Wednesday declared a local holiday for Kanyakumari district on July 24
இதையும் படிக்க : ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கமல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.