முகப்பு
கன்னியாகுமரி

பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 மே, 2025 at 9:54 PM
காளிமலை கோயிலில் முதல் அடுப்பில் தீமூட்டுதலையொட்டி நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், கோயில் நிா்வாகிகள்.
பகிர்:

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்திலுள்ள இந்த மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி நாளில் காளிதேவிக்கு பொங்கல் வழிபாடு திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இம்மாவட்டத்திலும், கேரளத்திலிருந்தும் திரளான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டனா்.

முன்னதாக, காணியின பழங்குடி தலைவா்களுக்கு மரியாதை அளித்தல் நடைபெற்றது. அதையடுத்து, முதல் அடுப்பில் தீமூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், விஸ்வ ஹிந்து பரிஷத் தேசியச் செயலா் தாணுமாலயன், காளிமலை சேவா சங்கத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஆன்மிகக் கருத்தரங்கு நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →