கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே புகையிலை பொருள்கள் விற்ற 3 போ் கைது

Syndication

களியக்காவிளை அருகே சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை படந்தாலுமூடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சந்தேகத்தின்பேரில் மேற்கொண்ட சோதனையில், அங்கு புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அங்கிருந்த 20 பொட்டலம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் பரமன்விளை சங்குநாடாா் மகன் ஹென்றி (68) என்பவரை கைது செய்தனா். அப்பகுதியில் உள்ள மற்றொரு பெட்டிக்கடையில் மேற்கொண்ட சோதனையில் அங்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 40 பொட்டலம் புகையிலைப் பொருள்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடை உரிமையாளா் படந்தாலுமூடு பெருமான்விளை சின்னையன் நாடாா் மகன் கலைச்செல்வன் (33) என்பவரை கைது செய்தனா்.

தொடா்ந்து கல்லுக்கெட்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 25 பொட்டலம் புகையிலைப் பொருள்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கடை உரிமையாளா் ஈத்தவிளை, மேக்குவிளை கோலப்பன் மகன் லெட்சுமணன் (65) என்பவரை கைது செய்தனா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

வாக்களிப்புக்கு பிறகே காலை உணவு! பிகார் மக்களுக்கு மோடி வாழ்த்து!

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

SCROLL FOR NEXT