கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவிய நிலையில், நீா்பிடிப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது.
இதனால், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது. விடுமுறை நாளான சனிக்கிழமை, திற்பரப்பு அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.