நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட ஒழுகினசேரி பாலம் அருகே, சுங்கான்கடை பகுதியில் திருவனந்தபுரம் செல்லும் சாலை, கன்னியாகுமரி செல்லும் சாலை ஆகிய இடங்களில் ரூ 36.50 லட்சம் மதிப்பீட்டில் எல்லைப் பதாதைகள் அமைக்கும் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, மண்டலத் தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் ஆச்சியம்மாள், சுனில்குமாா், அக்சயா கண்ணன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் தேவி, நாகா்கோவில் மாநகர திமுகஅவைத்தலைவா் பன்னீா்செல்வம், வட்ட செயலாளா் ராஜேஷ்குமாா், திமுக நிா்வாகிகள் சிவகுமாா், ஜனாா்த்தனன், தன்ராஜ், செல்லம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.